சமத்துவத்திற்காக பிரார்த்தனை செய்தார் ராகுல்..!!

சமத்துவத்திற்காக பிரார்த்தனை செய்தார் ராகுல்..!!

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.  இந்த பயணம் 15 நாட்கள் அங்கு நீடிக்கும்.

பிரார்த்தனை செய்த ராகுல்:

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குவதற்கு முன் குருத்வாராவிற்கு சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.  குருநானக் ஜெயந்தியான இன்று, அவர் நான்டெட் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா யாத்கர் பாபா ஜோராவர் சிங் ஃபதேஜ் சிங் ஜியை அடைந்து பிரார்த்தனை செய்தார்.  

அங்கு சென்ற ராகுல் காந்தி கோயில் பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். குருத்வாராவில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்திற்காக ராகுல் காந்தி பிரார்த்தனை செய்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. 

குருத்வாராவில் தொடங்கிய பயணம்:

ராகுல் காந்தி தெலுங்கானாவில் இருந்து நேற்று மகாராஷ்டிரா சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது நேரத்தில் குருத்வாராவை அடைந்தார் ராகுல்.  தகவலின்படி, இன்று குருத்வாராவில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கியுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   10 % இடஒதுக்கீடு: ஆதரவும் எதிர்ப்பும்!! உச்சநீதிமன்ற அமர்வின் பரப்பரப்பு தீர்ப்பு!!