நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார்...காரணம் என்ன?!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார்...காரணம் என்ன?!!

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் பங்கேற்க மாட்டார்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியின் எம்.பி., யாக உள்ளார்.  இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் எனக் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் மும்முரமாக இருப்பதால் கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என அவர் காரணம் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ’பழங்குடியினர் பெருமை தினம்’...குடியரசு தலைவர் பங்கேற்பு!! ”பழங்குடியினர் பெருமை தினம்” குறித்து விரிவாக காணலாம்....