ராகுல்காந்தி வரும் 30ஆம் தேதி கோவாவில் பிரச்சாரம்.!!

ராகுல்காந்தி வரும் 30ஆம் தேதி கோவாவில் பிரச்சாரம்.!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 30-ம் தேதி, கோவாவில் தனது பரப்புரையை தொடங்குகிறார்.

உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5  மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ளது.

இதனை முன்னிட்டு தேர்தல் தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வருகிற 30-ம் தேதி கோவாவிற்கு செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து தமது பிரச்சாரத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவர் மீனவர்கள் மற்றும் சுரங்கம் மூடலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவுள்ளார்.