உச்சநீதிமன்றம் சென்ற ராகுல்காந்தி...மனுவில் சொன்ன 10 காரணங்கள் என்னென்ன?

உச்சநீதிமன்றம் சென்ற ராகுல்காந்தி...மனுவில் சொன்ன 10 காரணங்கள் என்னென்ன?

குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் 10 காரணங்களை எடுத்துரைத்துள்ளார்.

மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக  ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதையும் படிக்க : நாளை எதிர்கட்சிகள் கூட்டம் : மாநாட்டுத் திடலை ஆய்வு செய்த முதலமைச்சர் சித்தராமையா!

ஆனால் இந்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மனுவில், மோடி சமூகம் என்பது இந்திய தண்டனை சட்டத்திற்குள் வரும் வரையறுக்கப்பட்ட சமூகம் இல்லை, தான் கூறியது புகார் தாரரை குறிப்பிடவில்லை, தன்னுடைய கருத்தால் புகார்தாரர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடவில்லை போன்ற 10 காரணங்களை குறிப்பிட்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளார்.