குவாட் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்..!

குவாட் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்..!

டெல்லியில் குவாட் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டு, கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குவாட் அமைப்புக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது அமைதி மற்றும்  பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது.