புரட்டாசி முதல் நாள்...! திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...!

புரட்டாசி முதல் நாள்...! திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...!

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. அந்த வகையில் இன்று புரட்டாசி மாத முதல் நாள் என்பதால்,  திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய நிலவரப்படி, இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 64 அறைகளிலும் நிரம்பி உள்ளனர்.

அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக வழிபட முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. 300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதனால் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை கிடைக்கும்படியான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. நேற்று ஒரு நாளில், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 392 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரு  நாளில் மட்டும் 4 கோடியே 92 லட்ச ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.