மருத்துவரை கரம் பிடித்தார் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்...!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கிற்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

மருத்துவரை கரம் பிடித்தார் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்...!

விவாகரத்துக்கு பின்னதாக பகவந்த் மானின் மனைவி தனது குழந்தைகளோடு அமெரிக்காவில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் இடையில் தனது தாய் மற்றும் சகோதரியின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த பகவந்த் மான் மருத்துவர் குர்பீத் கவுரை இன்று மனம்முடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதனால் சண்டிகரே விழாக்கோலத்தில் காட்சியளித்தது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதில் பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்றார். 

அரசியலுக்கு வருவதற்கு முன் பகவந்த் மான் ஒரு காமெடி நடிகராக இருந்தவர். பல விமர்சனங்களில் சிக்கிய பகவந்த் மான் ஒரு போதைக்கு அடிமையானவர், பொறுப்பில்லாதவர் போன்ற கடுமையான விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் ஆளானார். இதன் இடையில் அவர் மதுவினால் தள்ளாடுவது போன்ற வீடியோக்களும் மக்கள் கண்பார்வையில் சிக்கியது. இருப்பினும் இவர் மீது நம்பிக்கை விடாது இருந்தார் இவரது முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுர். 

ஒருகட்டத்தில் மதுவை நிறுத்துவேன் என தனது மனைவியிடம் தாய் மீது சத்தியம் செய்துள்ளார். இருப்பினும் மதுவை விடாத பகவந்த் மானை ஒருகட்டத்தில் வெறுத்து போனார் இந்தர்ப்ரீத். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015 ஆம் வருடத்தின் போது விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் கணவரை பிரிந்த இந்தர்ப்ரீத் கவுர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பகவந்த் மானோ தனது தாயுடன் கிராமத்தில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

சமீபத்தில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான். இதற்கு இவரின் முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுர் முதல்வரானது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதன் இடையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பகவந்த்.

சண்டிகரில் இருக்கும் அரசு இல்லத்தில் இன்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகைத்தருவதாகவும், மணமகள் பெயர் குர்பிரீத் கவுர் எனவும் இவர் ஒரு மருத்துவர் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளனர். 

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பகவந்த் மானின் தாயார் சொந்த கிராமத்தில் இருந்து அரசு இல்லத்துக்கும் சென்றுள்ளார். பஞ்சாப்பில் கேங்வார் நடக்கும் அபாயம் இருக்கும் நிலையில் திருமணத்தில் பங்கேற்கும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.