வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி தொழிற்பயிற்சி மாணவர்கள்...!

வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி தொழிற்பயிற்சி மாணவர்கள்...!

புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி பள்ளியை தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாஸ்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் வெங்கட சுப்பா ரெட்டியார் பெயரில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி பள்ளியில் 16 பாட பிரிவுகள் இருந்த நிலையில், தற்போது 4 பாட பிரிவுகளில் 110 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இதனையடுத்து, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் இதனை அரசு தொழிநுட்ப கல்லூரி உடன் இணைக்க பள்ளி கல்வி துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பயிற்சி பள்ளி வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.