தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி!!

தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி!!

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55-ம் ஆண்டு கம்பன் விழாவை தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தமிழிசை,  தாய்மொழிதான் உயிர் என்றாலும் பிற மொழி கற்பதில் தவறில்லை என்றார். தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குவதாகவும் ஆனால் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்கக் கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.