புதுச்சேரி : ஜி 20 விழிப்புணர்வு மாரத்தான்...! மாணவர்கள் பங்கேற்பு...!

புதுச்சேரி : ஜி 20 விழிப்புணர்வு மாரத்தான்...! மாணவர்கள் பங்கேற்பு...!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டும் புதுச்சேரியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

ஜி.20 நாடுகளின் மாநாடு இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது, மேலும் ஆரம்பகட்ட மாநாடு வரும் 31 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது. எனவே ஜி20 நாடுகளின் மாநாடு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதலியார் பேட்டை பகுதியிலும் மராத்தான் போட்டி நடைபெற்றது. 

மூன்று கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு ஓடினர். முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய மரத்தான் ஏ.எப்.டி ரோடு, நூறு அடி ரோடு வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

இதையும் படிக்க : 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...! தேர்வுக்கட்டணம் குறித்த அறிவிப்பு...!