வெளிநாட்டுக்கு போறிங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க...

படிப்பு மற்றும் வேலை ரீதியாக வெளிநாடு செல்வோர் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டுக்கு போறிங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க...

படிப்பு மற்றும் வேலை ரீதியாக வெளிநாடு செல்வோர் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வேலை ரீதியாக வெளிநாடு செல்பவர்கள் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வெளிநாடு செல்ல விரும்புவோர், கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டிற்கு செல்பவர்கள் 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை 28 நாட்களுக்குப் பிறகு செலுத்திக் கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாடு செல்வோருக்காக தமிழ்நாடு முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் விவரங்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.