சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி  புகைப்படங்கள், வீடியோக்களை டிவிட்டரில் பகிர தடை...

சம்பந்தபட்ட நபரின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொதுவெளியில் பகிரப்படுவதற்கு டிவிட்டர் தடை விதித்துள்ளது.

சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி  புகைப்படங்கள், வீடியோக்களை டிவிட்டரில் பகிர தடை...

சர்வதேச அளவில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் தளமாக டிவிட்டர் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் டிவிட்டரில் நபர் ஒருவரின் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ அந்நபரின் அனுமதியின்றி பகிரப்படுவதற்கு தடை விதித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் தொலைபேசி எண், முகவரி மற்றும் ஐடி போன்ற பிறரின் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படுவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயனர்களின் பாதுகாப்பு கருதியும், தனிநபர் உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் டுவிட்டர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.