பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு..! 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி...

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை முழுவதும் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு..! 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி...
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வரும் மத்திய அரசின் போக்குக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.