தீபாவளியையொட்டி அயோத்தி செல்லும் பிரதமர் மோடி..!

தீபாவளியையொட்டி அயோத்தி செல்லும் பிரதமர் மோடி..!

தீபாவளிப் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேசம் அயோத்தி நகருக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில், மாலையில் அயோத்தி செல்லும் பிரதமர் மோடி, ராம் லாலாவை வழிபட்டு ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை ஆய்வு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிட்டபின், பிரமாண்ட தீப உற்சவ கொண்டாட்டத்த தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் அவரின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொண்டாட்டங்களும் தொடங்கியுள்ளன.