இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் :  மனதின் குரல் நிகழ்ச்சியில் மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி புகழாரம்  !!

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் :  மனதின் குரல் நிகழ்ச்சியில் மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி புகழாரம்  !!

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையன்று உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று 1975ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் ஜனநாயகத்தின் மீது இருந்த பற்றை மக்களிடம் இருந்து அசைக்க முடியவில்லை எனவும், ஜனநாயக செயல்முறையின் மூலமே மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுத்ததாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நம் நாட்டில் விண்வெளித் துறையில் பல சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளதாகவும், விண்ணில் ஏவப்படவுள்ள மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் பள்ளி மாணவி தன்வி படேல் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.  

மேலும், குர்டேன் விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா மீண்டும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறிய மோடி, பளு தூக்குதலில் தங்கம் வென்ற சென்னையை சேர்ந்த தனுஷ் போன்ற இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மிதாலி ராஜ் ஒரு அசாதாரண வீராங்கனை என மோடி புகழாரம் சூட்டினார்.