பிரச்சினைகளை திசை திருப்பவே காங்கிரசை விமர்சித்தார் பிரதமர் மோடி!!

பிரச்சினைகளை திசை திருப்பவே காங்கிரசை விமர்சித்தார் பிரதமர் மோடி!!

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம்  போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே நாடாளுமன்றத்தில் பிரதமர் காங்கிரசை விமர்சித்ததாக மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பிரதமர் முன்னிலையில் நாட்டின் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, ஜிடிபி, தேசிய பாதுகாப்பு, ஒற்றுமை ஆகிய பிரச்சனைகளை  காங்கிரஸ் முன்வைத்ததாகவும், ஆனால் நாட்டின் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை விடுத்து, காங்கிரசை விமர்சித்ததன் மூலம் பிரச்சனைகளை பிரதமர் மோடி திசை திருப்பியதாகவும் சாடினார்.