உலக செஸ் சாம்பியனை 2வது முறையாக வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா...!

இந்தியாவை சேர்ந்த 16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

உலக செஸ் சாம்பியனை 2வது முறையாக வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா...!

செஸ்சபிள் மாஸ்டர்ஸ் என்னும் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். அப்போது இவர்களுக்கான போட்டி டிராவை நோக்கி சென்றபோது, கார்ல்சன் செய்த தவறு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.  இருப்பினும், செஸ்சபிள் மாஸ்டர்ஸ் போட்டியில் கார்ல்சன் 15 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்திலும், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

சீனாவின் வெய் யி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை அவர் 2வது முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.