அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மோதல்.. ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது  மோதல்.. ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் ஒரு தரப்பினர் ஊர்வலம் சென்ற போது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கட்டைகளை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்பட பலர் காயமடைந்தனர்.  இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் அப்பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானா தெரிவித்துள்ளார். டெல்லி போலீசை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.