
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட கொம்பாக்கம் - வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையில் உள்ள பனை மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இந்த விஷ வண்டுகள் இன்று காலை முதல் அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்கள் ஏராளமானோரை தாக்கியது. இதில் ஒருசிலருக்கு முகம் வீங்கி பாதிக்கபட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிக்க : இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்...?