எதிர்மறை சக்தியுடன் போராட உதவும் யோகா... பிரதமர் மோடி உரை...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உறையாற்றினார். 

எதிர்மறை சக்தியுடன் போராட உதவும் யோகா... பிரதமர் மோடி உரை...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார்.  அப்போது உடல் நலத்துக்கு யோகா என்ற தலைப்பில் யோகாசனத்தின் பெருமைகள் மற்றும் மருத்துவத்தில் யோகாவின் பங்கு குறித்து நாட்டு மக்களிடையே எடுத்துரைத்தார்.
 
யோகா வாழ்வியலின் ஒரு அங்கம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி மன வலிமைக்கு யோகா சிறந்த பயிற்சி எனவும் குறிப்பிட்டார். பேரிடர் காலத்தில் நம்பிக்கையின் ஒளிக் கீற்றாக யோகா திகழ்வதாகவும் மோடி தெரிவித்தார்.
 
அப்போது “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி  வாய்ப்பச் செயல்” என்ற திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார்.  
 
தற்போதைய கொரோனா சூழலில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யோகாவை கவசமாக பயன்படுத்துவதாகவும், அனைவரும் தினந்தோறும் சுவாச பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். எதிர்மறை சக்தியுடன் நாம் போராட யோகா உதவுகிறது என்று கூறினார் பிரதமர் மோடி.
 
உலகெங்கிலும் உள்ளவர்கள் யோகாசனம் செய்ய ஏதுவாக உலக சுகாதார அமைப்புடன் இணைந்து எம்.யோகா என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.