நாய் வாக்கிங் செல்ல டெல்லி ஸ்டேடியத்தை பயன்படுத்திய ஐ.ஏ.எஸ் ஜோடிகள் - வெவ்வேறு இடத்துக்கு பணிமாற்றம்...

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடைபயிற்சி செல்வதற்காக  டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே  மூடப்பட்டதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து அவர், லடாக்கிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாய் வாக்கிங் செல்ல டெல்லி ஸ்டேடியத்தை பயன்படுத்திய ஐ.ஏ.எஸ் ஜோடிகள் - வெவ்வேறு இடத்துக்கு பணிமாற்றம்...

டெல்லி முதன்மை வருவாய் செயலாளராக இருக்கும் சஞ்சீவ் கிர்வார் என்பவர் அண்மையில் தியாகராஜ் மைதானத்தில் தனியாக மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்ற வீடியோ வெளியானது.

மேலும் விளையாட்டு வீரர்கள் முறையான பயிற்சியை மேற்கொள்ள விடாதபடி, அவருக்காக தான் மைதானங்கள் 7 மணிக்கே மூடப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து விளையாட்டு மைதானங்களை இரவு 10 மணி வரை திறந்து வைக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரியின் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டதை  அடுத்து, உள்துறை அமைச்சகம் அவரை லடாக்கிற்கும், அவரது மனைவியை அருணாச்சல பிரதேசத்திற்கும் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.