முதல்வர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!  

மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவின் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!   

மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவின் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முன்னாள் பயங்கரவாதியான செரிஸ்டர்பீல்டு தாங்கியூ சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் மேகாலாயா மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. நேற்று நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவின் வீட்டில் நேற்று இரவு வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வன்முறையை கட்டுப்படுத்த தலைநகர் ஷில்லாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நிலைமை மோசமாகி உள்ளதால் அங்கு இணையதள சேவையும், மொபைல் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.