மகராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

மகராஷ்டிராவில்  வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

தற்போது தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், கூடுதல் தளர்வாக வழிபாட்டு தலங்களை திறக்க  அரசு முடிவு செய்து, முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி, அக்டோபர் 7ம் தேதி முதல்,  வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  ஆனால் எத்தனை நபர்கள் ஒரே நேரத்தில் வழிபடுவது என்ற வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை.