அசாமில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் அவதி.. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

அசாமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

அசாமில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் அவதி.. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

அசாம் மாநிலத்தில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹகிலிபாரா, ஜாதியா, ஹட்டிகயோன் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் ஆறு போல் வெள்ளம் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அசாமின் தெற்கு சல்மாரா மன்கச்சார் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி அதிகப்படிான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் மேகாலயாவை ஒட்டியுள்ள கம்பெக்ரே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.