நாளை முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்... பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடியது.

நாளை முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்... பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற டிசம்பர் 23 ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை சட்டத்திற்கு எதிரான மசோதா முதல் நாளான நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. 

ஆனால்  வேளாண் மசோதா குறித்து அவையில் விவாதம் நடத்திய பின்னரே அதனை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப திட்டமிட்டு உள்ளனர்.  இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து அனைத்து கட்சியினருடன் கலந்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் குளிர்கால தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்து முன்கூட்டியே கேட்டு அறியப்படும் என கூறப்படுகிறது. மேலும்  கடந்த மழைக்கால கூட்டத்தொடரை போல் இல்லாமல் குளிர்கால கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவதற்கு எதிர்கட்சிகளிடம் ஒத்துழைப்பும் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.