அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் இந்தியாவில் இருந்து மணமக்களை வாழ்த்திய பெற்றோர் .. வைரல் வீடியோ

விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை மணமக்களின் பெற்றோர் கண்டு ரசித்தனர்.

அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் இந்தியாவில் இருந்து மணமக்களை வாழ்த்திய பெற்றோர் .. வைரல் வீடியோ

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பர்வத ரெட்டி - ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்பதி நாயுடு பேட்டையை சேர்ந்த சீனிவாச ரெட்டி - சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அமெரிக்காவில், 22ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமெரிக்கா செல்ல மணமக்களின் பெற்றோர் விசாவுக்காக விண்ணப்பித்தனர். ஆனால் விசா கிடைக்காததால் அவர்களால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கமாக கருதப்படும் நாயுடு பேட்டையில் உள்ள வி செல்லுலாயிட் நிறுவனத்தின் திரையரங்கில் திருமண நிகழ்ச்சியை காண முன்பதிவு செய்தனர். தொடர்ந்து 22ஆம் தேதி அதிகாலை அமெரிக்காவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டது.

மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இத்திருமணத்தை திரையில் கண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திரையரங்க திருமண நிகழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.