மணமேடையில் மூளைச்சாவு - மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்கள்!
திருமண நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்பூரில் 25 வயதான சைத்ரா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைப்பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சைதரா மேடையில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
சைத்ராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். துக்க செய்தியை கேட்ட சைத்ராவின் பெற்றோர்கள் கதறியுள்ளனர். பின்னதாக அவர்கள் தனது மகளின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோர்கள் முன்வந்துள்ளனர். இவர்களின் முடிவை அறிந்த பலரும் சைத்ராவின் பெற்றோர்களை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில் , சைத்ராவின் வாழ்வில் இது ஒரு முக்கியமான நாள் ஆனால் விதியோ வேறு திட்டத்தை தீட்டி விட்டது எனவும், இதயத்தினை நொருக்கும் சோகத்திற்கு நடுவே அவரது பெற்றோர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் அளித்தது நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது எனவும் இந்த செயல்கள் பலரின் உயிர்களை காப்பாற்றும் எனவும் கூறி இருக்கிறார். திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியிடையே பெரும் சோகத்தை நிகழ்த்தியிருக்கிறது.