பழங்குடியினருக்கான அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பேச்சு!

பழங்குடியினருக்கான அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பேச்சு!

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்ததன் மூலம் பழங்குடியினருக்கான அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி:

குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பருச் மாவட்டத்தில் உள்ள நேத்ரங் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

இதையும் படிக்க: ”மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி...சொன்னது என்ன?

அப்போது பேசிய அவர், குஜராத் மக்களுடையே வளர்ந்து டெல்லி சென்றுள்ள தான் தாய்மொழியிலேயே மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும், மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப்  பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் குஜராத் மக்களின் ஆசீர்வாதங்கள் தனக்கு கூடுதல் பலத்தைத் தருவதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்ததன் மூலம் பழங்குடியினருக்கான அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.