
இந்தியா நூறு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா நேற்று நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி வரலாற்று சாதனையை படைத்தது.
மோடி அரசின் இந்த அயராத முயற்சிக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், இந்த சாதனையை குறிப்பிடும் படத்தை மோடி தனது டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் இடம்பெற செய்துள்ளார்.
அதில் வாழ்த்துக்கள் இந்தியா; கொரோனாவுக்கு எதிராக 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.