சிறந்த சிறுதானிய தயாரிப்புகளுக்கு பிரதமர் பாராட்டு...

சிறந்த தரமான சிறுதானிய தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தட்னது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.
சிறந்த சிறுதானிய தயாரிப்புகளுக்கு பிரதமர் பாராட்டு...
Published on
Updated on
1 min read

இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

15 வகையான சிறுதானியங்களின் தரத்தை மதிப்பிட இந்தியா 8 தர அளவுருக்களை நிர்ணயித்து நல்ல தரமான சிறுதானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை  ஊக்குவிப்பதற்கான முக்கிய படி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com