கேரளா மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை...

கேரளாவில் 2-ந் தேதி வரை மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால், அம்மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின்  5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை...

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் வருகிற 2-ந் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மலையோர மாவட்டங்களில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதையடுத்து இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோல கேரள கடல் பகுதியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் சூறைக்காற்று வீசும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் லட்சத்தீவு உள்பட கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. வருகிற 3-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவும் அரசு தடை விதித்து உள்ளது.