ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்திட வேண்டும் - இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன்

ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்திட வேண்டும் - இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன்

இளைய தலைமுறையை சீரழிக்கும் ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்திட வேண்டும், என இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஏ.வி.ஆர். ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்து பேசிய ஜெயசீலன், ஆற்றல் மிகு சமுதாயத்தை அழிக்கின்ற அரக்கனாக ஆன்லைன் ரம்மி இருப்பதாகவும், அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவா் கூறினார்.