'ஒரே நாடு; ஒரே தேர்தல்' இன்று கூடுகிறது உயர்நிலைக்குழு!

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, பேரவை, மாநகராட்சி, பஞ்சாயத்து தோ்தல்களை நடத்தும் மத்திய பாஜக அரசின் கனவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆராய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்பட 8 போ் குழுவை மத்திய அரசு செப்டம்பா் 2-ம் தேதி அமைத்தது. முன்னாள் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. முதல் முறையாக கூடும் இந்தக் கூட்டம் அறிமுக கூட்டமாக இருக்கும் எனவும், இந்தக் குழுவின் வருங்கால செயல்திட்டம் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த விவகாரம் தொடா்பாக யாரை அழைத்து ஆலோசனை பெற்று விரிவான அறிக்கையை தயாரிக்கலாம் என ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. 

ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். இந்தத் திருத்தங்களை குறைந்தது 50 சதவீத பேரவைகள் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்