"ஒரு நாள் மகாராஷ்டிரா திரும்பித்தானே ஆக வேண்டும் !" - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து!

"ஒரு நாள் மகாராஷ்டிரா திரும்பித்தானே ஆக வேண்டும் !" - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து!

எவ்வளவு காலம்தான் அஸ்ஸாமில் தங்கியிருப்பீர்கள், திரும்ப வந்து தானே ஆக வேண்டும் எனக்கூறி சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிருப்தி எம்எல்ஏக்களை கடுமையாக சாடியுள்ளார்.

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் அஸ்ஸாமில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிர சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில், 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்படி துணை சபாநாயகர் ஜெர்வாலிடம் சிவசேனா மனு அளித்தது.

அதன்படி 16 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு நாளைக்குள் பதிலளிக்க துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், எத்தனை  நாள் தான் கவுகாத்தியில் இருப்பீர்கள், திரும்பித்தானே ஆக வேண்டும் எனக்கூறி ஜெர்வாலின் புகைப்படத்துடன் சஞ்சய் ராவத் தன் இணையப்பக்கத்தில் பதவிட்டுள்ளார்.