”ஒரே எம்.எல்.ஏ ஒரே ஓய்வூதியம்”.. சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பஞ்சாப் ஆளுநர்..!

ஒரு எம்.எல்.ஏ எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை..!

”ஒரே எம்.எல்.ஏ ஒரே ஓய்வூதியம்”.. சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பஞ்சாப் ஆளுநர்..!

ஒரே எம்.எல்.ஏ., ஒரே ஓய்வூதியம் சட்ட மசோதாவிற்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, ஒரு எம்.எல்.ஏ எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்படுகிறது. இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த தகவலை முதலமைச்சர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.