மும்பையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...  நாட்டின் மொத்த பாதிப்பு 4 ஆக உயர்வு...

மும்பையில் ஒருவருக்கு "ஒமிக்ரான்" பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து  நாட்டின் மொத்த பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...  நாட்டின் மொத்த பாதிப்பு 4 ஆக உயர்வு...

பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கபடுகிறார்கள். இவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் வெளிநாட்டில் இருந்து  கர்நாடக மாநிலம் பெங்களூரைச் வந்த   இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகஅம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வேயில் இருந்து இந்தியா திரும்பிய அவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது; 

அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 வயதான இவர் தென்னாபிரிக்காவில் இருந்து மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் டோம்பிவலி பகுதிக்கு திரும்பியதாக மகாராஷ்டிர சுகாதார துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மகாராஷ்டிரா சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.  

நேற்று ஒரே நாளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.