எம்.எஸ்.எஸ்.இ தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கான தேசிய விருதை பெற்றது ஒடிசா!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கான தேசிய விருதை ஒடிசா மாநில அரசு தட்டிச்சென்றுள்ளது.

எம்.எஸ்.எஸ்.இ தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கான தேசிய விருதை பெற்றது ஒடிசா!

ஆண்டு தோறும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநில அரசுக்கு மத்திய அரசு தரப்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு 2021-22 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒடிசா மாநில அரசு முதல் இடத்தை பிடித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கான தேசிய விருதை பெற்றுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கு மாவட்ட அளவில் அளிக்கப்பட்ட சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது பிரிவில் ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்துக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.