அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கிகளுக்கு தடை.. எங்கு தெரியுமா?

அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கிகளுக்கு தடை.. எங்கு தெரியுமா?

உத்தரபிரதேசத்தில் 37 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் 55 ஆயிரம் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு இதுவரை 37 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு 55 ஆயிரம் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்தந்த மத வழிபாட்டுத் தலங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.