என்னை கைது செய்ய இதுவரை எந்த நோட்டீசும் தரவில்லை - கார்த்தி சிதம்பரம் !!

தன்னை கைது செய்ய இப்போது வரை எந்த நோட்டிசும் சிபிஐ வழங்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

என்னை கைது செய்ய இதுவரை எந்த நோட்டீசும் தரவில்லை - கார்த்தி சிதம்பரம் !!

சீனப் பிரதிகளுக்கு இந்தியாவில் பணிபுரிவதற்காக முறைகேடாக விசா பெற்று தருவதற்கு பணம் பெற்ற வழக்கில் இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜரானார்.  விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்,

விசாரணை என்ற பெயரில் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதாகவும் நேற்றைப் போலவே இன்றைய தினமும் வெத்து பட்டாசாக விசாரணை இருந்தது என கருத்து தெரிவித்தார். மேலும் சிபிஐ ஆக்கப்பூர்வமாக விசாரணை நடத்தவில்லை எனவும் அவர்களிடம் போலியான வழக்கிற்கு கேள்விகள் கேட்பதற்கு எதுவும் இல்லை,  அதே போல தன்னிடமும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்தார்.  

மேலும், கார்த்தி  சிதம்பரம் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு இப்போது வரை எந்த நோட்டீஸும் தன்னிடம் சிபிஐ வழங்கவில்லை என தெரிவித்தார்.