மத்திய அரசிடம் ரூ.17.25 கோடியை செலுத்திய நீரவ் மோடியின் சகோதரி

வங்கி கடன் மோசடி செய்துவிட்டு, இங்கிலாந்து சிறையில் உள்ள நீரவ் மோடியின் சகோதரி 17 கோடியே 25 லட்சம் ரூபாயை, மத்திய அரசின் வங்கி கணக்குக்கு செலுத்தியுள்ளார்.

மத்திய அரசிடம் ரூ.17.25 கோடியை செலுத்திய நீரவ் மோடியின் சகோதரி

பஞ்சாப் தேசிய வங்கியில் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், இவ்வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கும் அவரது சகோதரி பூர்வி மோடி, தனக்கு தெரியாமல் இங்கிலாந்தில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.

அவர்களது அறிவுறுத்தலின் பேரில் தற்போது அந்த கணக்கில் இருந்த 17 கோடியே 25 லட்சம் ரூபாயை மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு பூர்வி மோடி மாற்றியுள்ளார். இந்த வங்கி கணக்கை பூர்வி மோடிக்கு தெரியாமல் நீரவ் மோடி தொடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.