மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சகம்... கூட்டுறவுத்துறை அறிமுகம்... 

கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கினார் மோடி

மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சகம்... கூட்டுறவுத்துறை அறிமுகம்... 
கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்.மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை  6 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 
நாடு முழுக்க கூட்டுறவு துறையை கவனிப்பதற்காக, கூட்டுறவு துறையை பலப்படுத்த, புதிய திட்டங்களை கொண்டு வர, கூட்டுறவு துறைக்கான விதிமுறைகளை உருவாக்க, நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சகத்தின் அமைச்சராக முதன்முதலில் யார் பதவியேற்க போகிறார்கள் என்பது இன்று மாலை தெரியவரும்.