ஸ்தம்பித்தது தலைநகரம்... விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் எதிரொலி... கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள் அணிவகுப்பு...

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் எதிரொலியாக டெல்லி-குருகிராம் எல்லை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ஸ்தம்பித்தது தலைநகரம்... விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் எதிரொலி... கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள் அணிவகுப்பு...

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி எல்லை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மிகுந்த சோதனை உட்படுத்தப்பட்ட பிறகு மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் டெல்லி எல்லையை கடக்க முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கார்களாகவே காட்சியளிக்கின்றன.