கடலுக்கு அடியில் தேசியக் கொடி..! 

கடலுக்கு அடியில் தேசியக் கொடி..! 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசின் வேண்டுகோள்:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட அரசு பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: வீட்டுச் சுற்றுச்சுவரை தேசியக்கொடியாக்கிய முன்னாள் இராணுவ வீரர் !!

மக்கள் ஆர்வம்:

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை மக்கள் மிகுந்த ஆர்வமுடனும், தேசபக்தியுடனும் கொண்டாடி வருகின்றனர். தங்ளது சமூக வலைதளப்பக்கங்ளில் சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றுவது, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது, பேரணி நடத்துவது என பல வகைகளில் கொண்டாடி வருகின்றனர். 

அரவிந்த்:

புதுச்சேரியைச் சேர்ந்தவர் அரவிந்த்.  ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான இவர், புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வன்சர் என்ற பெயரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, மீன்வளத்தை பாதுகாக்க கடலுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியது, ஆழ்கடலில் செஸ் விளையாடி மகாபலிபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டிக்கு வரவேற்பு அளித்தது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க: மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம்..! நிர்மலா சீதாராமன் அதிரடி..!

கடலுக்கு அடியில் தேசியக் கொடி:

இந்நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் தேசிய கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். புதுச்சேரி கடற்கரையில் இருந்து படகு மூலம் கடலுக்குள் சென்று, கடலுக்கு அடியில் சுமார் 75 அடி ஆழத்தில், தேசிய கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். இதேபோல் சென்னை நீலாங்கரை கடற்கரையிலும் 75 அடி ஆழ்கடலுக்குள் சென்று தேசிய கொடியை பறக்கவிட்டுள்ளார் அரவிந்த்.