தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு... சோகத்தில் திரையுலகம்

தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சரி விஜய் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு... சோகத்தில் திரையுலகம்

பிரபல கன்னட நடிகர் சஞ்சரி விஜய் கடந்த 12 ஆம் தேதி நண்பரை சந்தித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சஞ்சரி விஜய் மூளைச்சாவு அடைந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

brain dead declared actor Sanchari Vijay met accident RIP

இதையடுத்து நடிகர் சஞ்சரி விஜய்-யின் உடலுறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இந்த நிலையில் கன்னட நடிகர் சஞ்சரி விஜய் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.