முப்படைகளின் தற்காலிக தலைமை தளபதியாக நரவனே நியமனம்...

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவை தொடர்ந்து ராணுவ தலைமை தளபதி நரவனே முப்படைகளின் தற்காலிக தலைமை தளபதியாக நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் தற்காலிக தலைமை தளபதியாக நரவனே நியமனம்...

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதலாவது தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிர் தப்பிய விமானப்படை வீரரும், பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டரை இயக்கி சென்றவருமான வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

முப்படைகளையும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்பை வகிப்பவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் ராணுவ விவகாரங்களுக்கான துறையின் செயலாளராகவும் பதவி வகிப்பார். மேலும்  நிரந்தர தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகர் ஆகிய பொறுப்புகளும் முப்படை தலைமை தளபதிக்கு உள்ளது. பெரும் பொறுப்புகள் கொண்ட இப்பதவியை வகித்து வந்த முதல் தலைமை தளபதி பிபின் ராவத்  மறைந்ததை தொடர்ந்து ராணுவ தலைமை  தளபதி எம்.என் நரவனே முப்படைகளின் தற்காலிக தலைமை தளபதியாக நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை தற்காலிக முப்படை தலைமை தளபதியாக எம்.என் நரவனே செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.