நாகலாந்து, திரிபுரா, மேகலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.  

நாகலாந்து, திரிபுரா, மேகலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!

நாகலாந்து, திரிபுரா, மேகலாயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

திரிபுரா:

அதில் திரிபுரா மாநிலத்தில் பிப்.16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்பு மனு மறுபரிசீலனை ஜனவரி 31-ம் தேியும், மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 2 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கபட்டுள்ளது.

நாகலாந்து, மேகாலயா:

நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்  ஒரே கட்டமாக நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேட்புமனு , ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 7 ஆம்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும், பிப்ரவரி 8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.   

வாக்கு எண்ணிக்கை:

3 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படும் என  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோடு இடைத்தேர்தல் எப்போது....வேட்பாளர்கள் யார்?!!