பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: நாடு முழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. 45 பேர் கைது..!

முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: நாடு முழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. 45 பேர் கைது..!

நாடு முழுவதும் சோதனை:

நாடு முழுவதும் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில்அமலாக்க துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 100 இடங்களில் சோதனை மேற்கொண்டது. 

5 வழக்குகள்:

பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்புடைய ஐந்து வழக்குகள் சம்பந்தமாக இந்த சோதனையானது நடத்தப்பட்டது. விசாரணை மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும், ஆதாரத்தின் அடிப்படையிலும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய, தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட, தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்திய பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலங்களில் சோதனை நடைபெற்றது. 

ஆவணங்கள் பறிமுதல்:

நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், கூர்மையான ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45 பேர் கைது:

அத்தோடு இந்த சோதனையின் முடிவில், பிஎஃப்ஐ அமைப்பினர் 45 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர். அவர்களில் 19 பேர் கேரளாவிலும், 11 பேர் தமிழகத்திலும், 7 பேர் கர்நாடகாவிலும் கைது செய்யப்பட்டனர்.