முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதலாக 3 பேர் சேர்ப்பு

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதலாக 3 பேர் சேர்ப்பு

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் ஏற்கனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 8ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏற்கனவே முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு தலைவராக குல்சன் ராஜ் மற்றும் தமிழக கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுனரும், தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் இருந்து தலா 1 தொழில்நுட்ப வல்லுனரும் கூடுதலாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியனை தமிழக அரசின் முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் தொழில்நுட்ப வல்லுனராக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.