உத்தரபிரதேசத்தில் பழி தீர்த்த பாஜ.க. : முலாயம் சிங் யாதவின் மருமகளை கட்சியில் இணைத்து அதிரடி!!

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் பழி தீர்த்த பாஜ.க. : முலாயம் சிங் யாதவின் மருமகளை கட்சியில் இணைத்து அதிரடி!!

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என கொத்து கொத்தாக கட்சியைவிட்டு வெளியேறினர். அப்படி வெளியேறியவர்களில் பலரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதற்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளது பா.ஜ.க.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக்கின் மனைவி அபர்ணா யாதவ் இன்று, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜக-வில் இணைந்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பாஜகவில் இருந்து 3 அமைச்சர்கள் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பழி தீர்க்கும் வகையில் முலாயம் சிங் யாதவின் மருமகளை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

முலாயம்சிங் யாதவின் 2-வது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீப் யாதவ். அவரது மனைவிதான் அபர்ணா யாதவ். பிரதீப் யாதவுக்கும் அர்பணா யாதவுக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது. 2017-ல் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.