இனி முகலாய தோட்டத்தின் பெயர்...

இனி முகலாய தோட்டத்தின் பெயர்...

குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டம் தற்போது அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அம்ரித் உத்யன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அம்ரித் உத்யன் தோட்டத்தில் 12 வகையான துலிப் மலர்கள் உள்ளன. தொடர்ந்து, துலிப்ஸ் மற்றும் ரோஜா மலர்களை மக்கள் காணக்கூடிய வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொது மக்களுக்காக தோட்டம் திறந்துவிடப்படும். 

இதையும் படிக்க : தமிழ்நாடா..? தமிழ்நாய்டுவா... ? மீண்டும் எழுந்த சர்ச்சை...சுட்டிக்காட்டிய இராமதாஸ்...!

அந்த வகையில், இந்த ஆண்டும்  ஜனவரி 31 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை மொத்தம் இரண்டு மாதங்களுக்கு திறக்கப்படவுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டம் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் குறிப்பாக, மார்ச் 28-ம் தேதி விவசாயிகளுக்கும், மார்ச் 29-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மார்ச் 30-ம் தேதி காவல்துறை மற்றும் ராணுவத்தினருக்காகவும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.